விபத்தில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டவர் 03 மாதங்களின் பின் வீடு திரும்பிய அதிசயம்
வாகன விபத்தொன்றில் உயிரிழந்ததாக கருதப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நபர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த சம்பவம் மீகொட-முத்துஹெனாவத்த பகுதியில் பதிவாகியுள்ளது.
79 வயதான குறித்த நபர் 6 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர் கடந்த பெப்ரவாரி மாதம் 4ஆம் திகதியே இறுதியாக வீட்டுக்கு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் வெல்லம்பிடிய பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழில் புறிந்து வருபவர் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மீகொட-முத்துஹெனாவத்த பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்பட்டு அவரது இரண்டு புதல்வர்களும் உயிரிழந்தவர் தங்களது தந்தை என்பதை உறுதி செய்ததை தொடர்ந்தே அடக்கம் செய்ய சடலம் வழங்கப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து உயிரிழந்த நபரின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் மீண்டும் மீகொட- முத்துஹெனாவத்த பகுதியில் உள்ள தனது விட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் பதற்றமடைந்ததுடன் இது தொடர்பில் காவல் துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
பின்னர் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர உண்மையில் 6 பிள்ளைகளின் தந்தையான குறித்த பகுதியை சேர்ந்தவர் என்பதும் அத்துருகிரிய பகுதியில் உயிரிழந்தவர் இவரை போன்ற உருவம் கொண்ட வேறு ஒரு நபர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டது.
Post a Comment