02 பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட 11 பேர் கைது
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 11 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 11 பேரில் 2 பிரதேச சபை உறுப்பினர்களும் அடங்குவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (18) கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment