Header Ads

சிறந்த மஸ்ஜிதுகளுக்கு விருது வழங்கல்



ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிலுள்ள பள்ளிவாயல் நிருவாகிகளாக கடமை புரியும் நிர்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விசேட செயலமர்வு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஸியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்குப் பிராந்திய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜுனைட் நளீமி, மேலதிக மாவட்டப் பதிவாளர் எம்.ஐ.மாஜிடீன், முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சியாத், ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாயல் நிருவாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறந்த மஸ்ஜிதுகளுக்கு விருது வழங்கல் மற்றும் இதுவரைப் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைப் பதிவு செய்தல் தொடர்பான விளக்கங்களும் மற்றும் பள்ளிவாயல்களை திறம்பட இயக்குதல், நம்பிக்கையாளர்களை வளப்படுத்தல், சமூகத்துடனான உறவை மேம்படுத்தல், அந்நிய சமூகத்துடன் சேர்ந்து வாழ்தலை ஊக்குவித்தல் தொடர்பிலும் கருத்துக்கள் வழங்கப்பட்டது.

தற்கால சூழ்நிலையை கருத்திற் காண்டு பள்ளிவாயல்கள் பதிவு செய்தல் கட்டாயப்படுத்தப்பட்டள்ளது. இதுவரை முஸ்லிம், சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத பள்ளிவாயல்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் இடம்பெற்றது.

குகதர்ஷன்




Powered by Blogger.