பசில் கூறிய சின்ன இரகசியத்தை வௌியிட்ட ஜேவிபி
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்காது எனக் கூறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு மக்கள் விடுதலை முன்னணியிடம் கோரியதாக அந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தேவை என்றால் நான் சின்ன இரகசியம் ஒன்றை கூறுகிறேன். நான்கு மாதங்களுக்கு முன்னர் பசில் ராஜபக்ச எங்கள் கட்சியின் தலைவருடன் பேசியிருந்தார்.
அவர்களுக்கு 44 சத வீத வாக்குகள் மட்டுமே இருப்பதாகவும் முடிந்தால், மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது விருப்பு வாக்கை அவர்களுக்கு வழங்குமாறும் கோரியிருந்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள், வாக்காளர்கள் எங்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க மாட்டார்கள். அவர்கள் சின்னத்திற்கே வாக்களிப்பார்கள்.
அது எப்படியும் நடக்காது என நாங்கள் பசிலிடம் கூறினோம் என பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment