அதிரடிக்கு தயாராகும் மைத்திரி - கலக்கத்தில் வேட்பாளர்கள்
தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் 03 அறிக்கைகளின் தகவல்களை எதிர்வரும் நாட்களில் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, கடந்த் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் 2015-2018 காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஆகியன தற்போது ஜனாதிபதியின் கைவசம் உள்ளன.
தான் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பானவர் என்ற வகையில் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதன்படி ஜனாதிபதி தேர்தல் நிறைவுறும் வரையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக அந்தக் கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச செயற்படிகிறார்.

Post a Comment