Header Ads

இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் பாரிய மண் சரிவு; 20 அடி உயரமான மண்மேடு சரிந்தது

 
பாராளுமன்ற வளாகத்திலுள்ள மண்மேடொன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 20 அடி நீளமான பகுதி ஒன்றே தியவன்னா ஆற்றில சரிந்து வீழ்ந்துள்ளது.

தற்போது குறித்த பகுதியை சரி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை பாராளுமன்ற நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.

கொழும்பில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையுடனான வானிலையை அடுத்தே இந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதிக்கு புவிசரிதவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.