சாய்ந்தமருதில் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான 3 கஜமுத்துக்களுடன் இருவர் கைது (படங்கள்)
கஜமுத்துக்கள் அடங்கிய பொதியுடன் மோட்டார் சைக்கிளில் நின்ற இருவர் சாய்ந்தமருதில் வைத்து கைதாகியுள்ளனர்.
சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலின் முன்னால் பொதி ஒன்றுடன் இருவர்
சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை
அடுத்து மாறுவேடம் அணிந்து சென்ற மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ்
உத்தியோகத்தரின் உதவியுடன் குறித்த சந்தேக நபர்கள் கைதாகினர்.
செவ்வாய்க்கிழமை(8) இலவு 8 மணியளவில் அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த
அலிப்தம்பி முஹமட் ஹஸ்னி(வயது-30) மீரா முகைதீன் முகமட் சலீம்(வயது-39)
ஆகியோர் 3 முத்துக்களுடன் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட் கஜமுத்துக்கள் ரூபா 1 கோடியே 50 இலட்சம்
பெறுமதியானது என்றும் அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக கைப்பற்றப்பட்ட
கஜமுத்துக்கள் இவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment