Header Ads

இலங்கையில் அதிகரித்துள்ள மதுப்பாவனை; ஆண்டுக்கு 6.4 மில்லியன் லீற்றர்




கடந்த ஆண்டில் இலங்கையில் சுமார் 6.4 மில்லியன் லீற்றர் மதுபானம் நுகரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்கஹோல் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் மூன்று மில்லியன் பேர் மதுபானம் அருந்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 35 வீதமானவர்கள் மதுபானம் அருந்தும் பழக்கமுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் அருந்துபவர்கள் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 19 லீற்றர் மருபானம் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் மதுபானம் நுகர்வு மிகவும் அதிகளவில் காணப்படுவதாக தெரியவருகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மித மிஞ்சிய அளவில் மதுபானம் அருந்துவதனால் ஏற்படக் கூடிய நோய்கள் மற்றும் பாதிப்புக்களினால் அதிகளவான மரணங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
Powered by Blogger.