Header Ads

ஒரே நாளில் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்ட மைத்திரி



இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிக வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிட்ட தினமாக நேற்று (12) அமைந்நதுள்ளது.


நேற்றைய தினம் மாத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 65 வர்த்தமானி அறிவித்தல்களில் கையொப்பமிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற முறையில் இருக்கின்ற 65 வனப் பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் இவை கையொப்பமிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் கல்ஓய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இவ்வாறு கையொப்பமிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.