Header Ads

UNP இல் இருந்து JVP இற்கு சென்றவர் மீண்டும் UNP இல்



தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவை ஆதரிப்பதாக செப்டம்பர் 29ம் திகதி அன்று அறிவித்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய  ஜயம்பதி விக்ரமரத்னவின் ஆதரவை சஜித் பிரேமதாச பெறுவார்.

ஜயம்பதி விக்ரமரத்ன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தது அநுரவுக்கு முதல் வாக்கையும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான சக்திமிக்க வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை வழங்குமாறு தான் வேண்டுகோள்விடுப்பதாக குறிப்பிட்டிருந்தார்.


இருப்பினும், UNP  மூத்தவர்கள் குழுவுடன் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, அவர் தனது முடிவை மாற்றியமைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய இடதுசாரி முன்னணியின் மத்திய குழு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு முதல் வாக்கையும், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான சக்திமிக்க வேட்பாளருக்கு இரண்டாவது வாக்கை வழங்குமாறு எடுக்கப்பட்ட முடிவு குறித்து மீண்டும் பரிசீலனை செய்யுமாறு தமது கட்சி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய கட்சி மத்திய குழு இது தொடர்பாக பரிசீலிப்பதாகவும் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் தனது கட்சியின் மத்திய குழுவின் முடிவை மதிக்கிறேன் என்றும் அதற்கேற்ப செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.