Header Ads

சஜித் பற்றி சுமந்திரன் கூறியதை அம்பலப்படுத்திய மஹிந்த



அரசியல் விவகாரங்களில் சஜித்திற்கு போதிய அறிவு கிடையாதென சுமந்திரன் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.




குறித்த சந்திப்பில், சஜித் தொடர்பாக சுமந்திரன் இவ்வாறு கூறியதாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


அதாவது, இனப்பிரச்சனை விவகாரத்தில் சஜித்திற்கு போதிய அறிவு கிடையாது என்பதை, அவருடன் நடத்திய  பேச்சுவார்த்தைகளின் ஊடாக அறிந்து கொண்டதாக சுமந்திரன் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.