கோட்டாபய ராஜபக்ஷவை தேடி வரும் மற்றொரு முக்கிய பதவி
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் உயர் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கத்துவம் பெறுமாறு இதற்கு முன்னர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதேநேரம் கோட்டாபய ராஜபக்ஷ இதுவரை எந்தவொரு கட்சியிலும் அங்கத்துவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment