முஸ்லிம் காங்கிரஸுடன் இணைகிறார் ஜெமீல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பிரதித் தலைவரும் அந்தக்
கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான அரச வர்த்தக
கூட்டுத்தாபனத்தின்முன்னாள் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார்.
இந்த வாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸில் இணைந்து ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களிலும் அவர்
ஈடுபடவுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கலாநிதி
ஜெமீல், தான் அகில இலங்கை மக்கள் கா்கிரஸில் வகித்த அனைத்துப்
பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்வதாக கட்சியின் தலைவர் அமைச்ச்ர ரிஷாத்
பதியுதீனுக்கு முன்னர் உத்தியோகபூர்மாக அறிவித்திருந்தார்.
இந்த
நிலையில் அவரது இராஜினாவை கட்சியின் அரசியல் அதிகார பீடம் ஏற்றுக் கொண்டமை
தொடர்பில் கட்சியின் செயலாளர் எஸ்.சுபைதீன் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment