Header Ads

தேர்தல் பணிகளுக்காக பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா



நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் அத்தியட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்வாறு ஆணைக்குழு அனுமதியளித்துள்ள நிதியில்,  சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ள 45.8 மில்லியன் ரூபா நிதியும் உள்ளடங்கியுள்ளது.

எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படும் நிதிக்கு மேலதிகமாக, தேர்தல்கள் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களது நலன்புரி நடவடிக்கைகள்,  வாகன வாடகை, எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் ஏனைய நிதி தமக்கு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.