Header Ads

ஜனாதிபதி நாட்டில் இல்லை; ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை




நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைமைகள் எதுவும் கிடையாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரட்ன ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு நாட்டில் எவ்விதமான அவசர பயங்கரவாத அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தேவையற்ற பீதி கொள்ளத் அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பொது நிறுவனங்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்பு உச்ச அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அவசர பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னெடுக்கப்பட்டு வரும் வதந்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Powered by Blogger.