Header Ads

முஸ்லிம்கள் இன்றி நாட்டை நிர்வகிக்க முடியாதாம்; முஸ்லிம்களை புகழ்ந்து தள்ளிய பசில்




கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் அனைத்து முஸ்லிம் மக்களினதும், அவர்களின் வியாபபரங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம் மக்களை மறந்துவிட்டு நாட்டை நிர்வகிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டில் வசிக்கின்ற அனைத்து இன சமூகங்களையும் ஒன்றிணைத்து வைக்கக் கூடிய இனம் முஸ்லிம்களே என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
Powered by Blogger.