Header Ads

இன்று அமெரிக்க நீதிமன்றில் விசாரணைக்கு வந்த கோட்டாவுக்கு எதிரான மனு

ලසන්තගේ දියණිය ගෝඨාභයට එරෙහිව ගොනුකළ චෝදනා ඇමරිකානු අධිකරණයෙන් ඉවතට


ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பாக அவரது மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு அமெரிக்க கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருத்த நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.