மகேஷ் சேனாநாயக்கவுக்கு திடீர் சுகயீனம்; வைத்தியசாலையில் அனுமதி
தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகவே அவர் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னரே அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment