ஈஸ்டர் தாக்குதல் கோட்டாபயவின் திட்டமா? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் மிகவும் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்ட ஒன்று என்று பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
அவர் தனது முகநூல் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அவர் வௌியிட்டுள்ள முகப்புத்தக பதிவில் தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஹிஸ்புல்லாவுடனான தொடர்பையும், இனவாதத்தை பரப்பிய தெரண மற்றும் ஹிரு ஊடகத்தையும் இறுதியில் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்பு படுத்தி வௌியிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், தயான் ஜயதிலக அந்த செய்தி பொய்யானது என்று மறுப்புத் தெரிவித்து கீழே இருக்க கூடியவாறு பதிவிட்டுள்ளார்.

Post a Comment