Header Ads

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் குமார வெல்கம வௌியிட்டுள்ள அதிரடி கருத்து





ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கவும் பின்னிற்கப்போவதில்லையென களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அதனையடுத்து பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் பலர் தற்போது பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ராஜபக்ஷ குடும்பத்தினர் உரிமையாக்கிக்கொள்ளலாம் என்ற சந்தேகமுள்ளது.

இந்தநிலையில் கட்சியைப் பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் கூறியுள்ளதாக அரச ஊடகமொன்று மேலும் அறிவித்துள்ளது.
Powered by Blogger.