இதொகாவின் இறுதித் தீர்மானம் வெளியானது
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.
கொட்டகலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.
இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்ட மேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிவித்தார்.

Post a Comment