Header Ads

தேர்தல் முடிவு குறித்து தேசிய கொள்கை நிலையம் வௌியிட்டுள்ள கணிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னம் வெற்றி பெற்ற மாவட்டங்கள், அது தோல்வியடைந்த மாவட்டங்கள், பிரதான வேட்பாளர்களாக மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பெற்று கொண்ட வாக்கு வீதங்கள் என்பவற்றை இந்த கணிப்புக்கான மூலங்களாக அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கு அமைய, மாவட்டங்களின் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய 2019ஆம் ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பெறும் வாக்கு வீதத்தை தேசிய கொள்கை நிலையம் கணித்துள்ளது.

Powered by Blogger.