Header Ads

இறுதிப் போர் குறித்த தகவல்களை போட்டுடைத்த பொன்சேகா




இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர் ,வாகரை , தொப்பிகல என்று சென்று முடித்து கிளிநொச்சி , முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை வெற்றிகரமாக நான் முடித்தேன்.

சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூட நான் சொல்லவில்லை.ஆனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றிகளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நான் இராணுவத்தளபதியாக இருந்தபோது மாதம் நாலாயிரம் பேரை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி படையை பலப்படுத்தினேன். யாரும் எப்படியும் மோதலில் ஈடுபடலாமென கோட்டாபய நினைத்தார்.

ஆனால் மோதல் நடக்கும் இடத்தில் இடத்தை சுருக்கி பயங்கரவாதிகளை ஒழித்தோம் . பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை.

பயங்கரவாதிகளை கொல்லாமல் இடங்களை பிடிப்பதில் அர்த்தமில்லை.நேர காலம் குறிப்பிட்டே நான் பயங்கரவாதிகளின் இடங்களை கைப்பற்றினேன்.

ரை கோர்ட் அணிந்து கோட்டாபய உத்தரவிட்டால் படையினர் அதற்கேற்றபடி செயற்பட மாட்டார்கள்.தளபதி ஒருவர் சொன்னால் தான் செய்வார்கள். அது தான் நடந்தது.

எனக்கு பாதுகாப்பமைச்சை வழங்கினால் நான் அதனை திறம்பட செய்வேன். இன்னொரு இராணுவத் தளபதிக்கு இந்த யுத்தத்தை வைத்துவிட்டு செல்லமாட்டேன் என்று அப்போது நான் கூறினேன்.

வெளிநாடுகளுடன் தேவையற்ற ஒப்பந்தங்களை செய்யமாட்டேன்”
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
Powered by Blogger.