மைத்திரியை சந்திக்க மறுத்த ரணில்; சஜித்துடன் இணைவாரா மைத்திரி
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்குமிடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று நடந்தது.
சஜித்துடன் இந்த சந்திப்பில் அமைச்சர்மார் அகில விராஜ் ,கபீர் ஹஷீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி மைத்ரிபால தரப்பில் அவர் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.முன்னதாக இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் கலந்து கொள்ளவிருந்தபோதிலும் இறுதிநேரத்தில் அவர் கலந்து கொள்ள மறுத்ததாக தெரிகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் ஆதரவு தமக்கு கிடைத்திருப்பதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட இதர கட்சிகளின் ஆதரவும் தமக்கு தேவையென்று சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் தரப்பில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி மைத்ரி ,இவை குறித்து கட்சியுடன் ஆலோசனை நடத்துவதாகவும் கட்சியின் நிலைப்பாடு வரும் ஐந்தாம் திகதி அறிவிக்கப்படுமெனவும் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கிடையில் தேவைப்படின் மீண்டும் சந்திப்பதென்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

Post a Comment