அமைச்சர் ரிஷாதின் சகோதரன் ரிப்கான் பதியுதீனை உடனடியாக கைது செய்ய உத்தரவு

தலை மன்னார் பிரதேசத்தில் உள்ள 240 இலட்சம் ரூபா பெறுமதியான காணியை போலி உறுதிப் பத்திரம் செய்து கையகப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாதின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான ரிப்கான் பதியுதீன் இவ்வாறு போலி உறுதிப் பத்திரம் செய்து காணியை கையகப்படுத்த முயற்சித்தாக கடந்த 2015 நவம்பரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு முறைப்பாட்டாளருக்கு சந்தேகநபரின் ஆதரவானர்கள் அச்சுறுத்தல் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Post a Comment