தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவின்றி வெற்றி பெற மஹிந்த அணி கடும் முயற்சி
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முழுமையான சிங்கள அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த கோத்தபாய ராஜக்ஷ திட்டமிடுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமையவே சிறுபான்மை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவும், ரிஷாட் பதியூதின் மற்றும் ஹக்கீமின் ஆதரவும் தங்களுக்கு தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று நாமல் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு மற்றும் வாக்குகளின்றி சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் கோத்தாய உட்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுஜன பெரமுனவுக்கு கூட்டமைப்பு, ரிஷாட் மற்றும் ஹக்கீமின் ஆதரவு பெற வேண்டிய அவசியம் இல்லை என நாமல் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதனை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து சிங்கள அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு பலத்தை கோரி வருகின்றனர்.
ராஜபக்ஷர்களின் இந்த முயற்சி மேலும் பிரிவினைகளை உருவாக்கும் ஆபத்தான முயற்சி என குறித்த ஊடகம் சாடியுள்ளது.

Post a Comment