Header Ads

கொழும்பில் இரகசியமாக சந்தித்துக் கொண்ட ரணில் - சம்பந்தன்; என்ன பேசினார்கள்?


UNP - TNA இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொழும்பில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பிலும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என இதன்போது சம்பந்தன் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மையப்படுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Powered by Blogger.