கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை
கல்முனை கல்வி
வலயத்தில் கல்முனை சாய்ந்தமருது மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கல்முனை
பற்றியா கல்லூரி 94 மாணவர்களும்,மருதமுனை அல் மனார் தேசிய கல்லூரியில் 23
மாணவர்களும், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தில் 19
மாணவர்களும்,கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் 18 மாணவர்களும்
சித்தியடைந்துள்ளனர்.
குறித்த கல்வி வலயத்தில்
முதலாமிடத்தினை மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவன் சாதனை
படைத்துள்ளதோடு அப்பாடசாலை அதிபர் எம்.ஜே.அப்துல் ஹஸீப் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 23
மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளார்கள் . இதில்
191 புள்ளி ஹலிலுல் ரஹ்மான் அஸ்றிப் அஹமட் என்ற மாணவன் புள்ளிகளை
பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் எமது கல்முனை கல்வி வலயத்தில் இப்
பரீட்சையில் பெற்ற அதிகூடிய புள்ளி இதுவாகும்.
இச்சாதனைக்கு அயராது உழைத்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவருக்கும்
தமது நன்றியையும், பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார்.
Post a Comment