Header Ads

தேர்தல் முடிவுகளின் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திடாதது ஏன்?


எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகளின் உத்தியோகப்பூர்வ ஆவணத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் நிறைவடைந்த பின்னணியில், வாக்குச்சீட்டுகள் 17 மத்திய நிலையங்களில் எண்ணப்பட்டுள்ளன.

இதன்படி, இறுதியாக தயாரிக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் அடங்கிய ஆவணம், கையெழுத்திடுவதற்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் முடிவு இறுதி தீர்மானம் எட்டப்படுவதற்கு முன்னர் எவ்வாறு தனியார் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது என்பதனை முன்னிலைப்படுத்தி, தேர்தல் முடிவுகள் அடங்கிய இறுதி ஆவணத்தில் மஹிந்த தேசபிரிய கையெழுத்திடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியான சோமரத்ன விதானபத்திரன எல்பிட்டிய தொழில்பயிற்சி அதிகார சபை வளாகத்திலிருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.