மாகந்துரே மதூஷின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு?
ஐக்கிய தேசிய முன்னணியினர் எதிர்வரும் நாட்களில் மாகந்துரே மதூஷை பிணையில் விடுவித்து விட்டு, அவரின் ஆதரவும் கோட்டாவுகே என்று பிரச்சாரம் செய்வார்கள் என மொஹமட் முசம்மில் கூறியுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நினவெட்டியவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அப்துல் ராசிக் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித் போதிலும் அவரின் ஆதரவை கேட்டு எவ்வித பேச்சுக்களும் நடத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நாட்டில் உள்ள எந்தவொரு நபரும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க முடியும் என்றும், அடிப்படைவாதிகளுடன் பேச்சு நடத்தின் அவர்களை இணைத்துக் கொள்ளும் தேவை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Post a Comment