Header Ads

தமிழ் தேசிய கூட்டமைப்பும் கோட்டாவுடன் உடன்பாட்டுக்கு வர முயற்சி


கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் நிலமை இவ்வளவு மோசமாக போவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புதான் என்பது கிழக்கு மாகாண தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களுக்கும் தெரியும என்று வரதராஜபெருமாள் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றி தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி செயலாலர் நாயகமும் முன்னாள் வடகிழக்கு முதலமைச்சருமான வரதராஜபெருமாள் இவ்வாறு தெரிவித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற கோட்டாபாய ராஜபக்ஷவுக்கஎங்களுடைய கட்சியாகிய தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி ஆதரவளிக்கின்றது.

மகிந்த ராஜபஷ வேட்பாளரை நியமிக்கும் முன்னர் நாங்கள் யாரை ஆதரிப்பது என முடிவு செய்து ஆரம்பத்திலிருந்தே அந்த கொள்கையில், அந்த நிலைப்பாட்டில் மாறாமல் இருந்து வருகிறோம். 

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் இன்றைய காலத்தின் தேவையையும் அரசியல் ரீதியாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஏற்படுகின்ற மாற்றங்களையும் கருத்தில் எடுத்து மிகப் பெருமளவில் தாமரை மொட்டுக்கு வாக்களிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரையில் குறிப்பாக வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் மிகப் பெரிய அளவில் அபிவிருத்தி தேவைப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளும் கிடைக்கவில்லை அபிவிருத்திகளும் கிடைக்கவில்லை.

இவற்றிலெல்லாம் ஒரு மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. ஒரு முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது.

இந்த ஐக்கிய தேசியக் கட்சியுடைய ஆட்சியை மாற்றினால்தான் தமிழ் மக்கள் இங்கு பாதுகாப்பாக இருக்க முடியும், தமிழ் மக்களுடைய நிலங்கள் பாதுகாக்கப்பட முடியும், தமிழ் மக்களுடைய கலாச்சார அடையாளங்கள் பாதுகாக்கப்பட முடியும் என நம்புகிறார்கள.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கூட எப்படியாவது கோட்டாபாய ராஜபக்ஷவுடன்  ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட வேண்டுமென்று முயற்சிக்கின்றது.

தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இருக்க கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு உடன்பாட்டுக்கு வருகின்ற நிலைமையானது கோட்டாபய ராஜபக்ஷ மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் பொய்யானவை என்பதை விட அவை அர்த்தமற்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு நிரூபிககப் போகின்றது என்று அவர் கூறினார்.

சரவணன்

No comments

Powered by Blogger.