Header Ads

சிறுபான்மை தொடர்பில் மீண்டும் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச


இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் சமமான உரிமையை ஏற்படுத்துவதே தமது இலக்கு என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.
அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டாரவின் கொழும்பு இல்லத்தில் தமிழ்;ப் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து இன்று கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை இனம் என விளிப்பதை கூட தான் விரும்பவில்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் மனோ கணேஷன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம், ரிஷாட பதியூதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இன மக்களும் ஒரே வகையில் செயற்படும் திட்டங்களையே தான் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.