20 வீதமான முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்கள் தேர்தல் இடாப்பில் இருந்து நீக்கம்
மன்னார் மாவட்டத்தில் சுமார் 20 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் டாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாறூக் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை மதியம்(11) இடம் பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு
தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்ட தேர்தல் இடாப்பில் பெயர்கள்
குறிப்பிடப்பட்டு தொடர்ச்சியாக சுமார் 20 வருடங்களுக்கு மேலாக வாக்களித்து
வந்த சிலரது பெயர் இம்முறை வாக்காளர் டாப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாக்காளர் டாப்பில் இருந்து பெயர் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு
முறனான செயல் என்றும், இதற்கு எதிராக தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு
தாக்கல் செய்வதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்கள் என்னை
நாடியுள்ளனர்.
நான் முதற்கட்ட நடவடிக்கையாக மன்னார் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளேன்.
மன்னார்
மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 25 வீதமான முஸ்ஸீம் வாக்காளர்கள்
இருக்கின்றார்கள்.அதில் சுமார் 20 வீதமான வாக்காளர்களின் பெயர்
நீக்கப்பட்டுள்ளமையானது முஸ்ஸீம் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகத்தை
ஏற்படுத்தி உள்ளது.
பெயர் நீக்கப்பட்டுள்ளவர்களை பார்க்கின்ற பொழுது அதிபர் ஆசிரியர்கள்
உள்ளடங்களாக சுமார் 30 வருடங்களுக்கு மேல் வாக்களித்தவர்களின் பெயர்கள்
நீக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment