Header Ads

ராஜித சேனாரத்ன தொடர்பில் மஹிந்த வௌியிட்ட கருத்து



புதிய அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளும் மற்றும் இணைத்துக் கொள்ளாத அரசியல்வாதிகள் சம்பந்தமாக மக்கள் நினைக்கின்றவாறே மேற்கொள்ளப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர்மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ராஜித சேனாரத்னவை புதிய அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டாம் என்று மக்கள் சத்தமிட்டு கூறிய போது, அவரை ஒருபோதும் அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.


No comments

Powered by Blogger.