அப்துல் ராசிக்கின் ஆதரவு தேவையில்லை; அவர் புத்த பெருமானுக்கு அவதூறு கூறியவர்
ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் அப்துல் ராசிக் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்தாக தெரிவித்துள்ள விடயம் தொடர்பில், கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
புத்த பகவான் தொடர்பில் அவதூறான கருத்தை வௌியிட்ட அப்துல் ராசிக் என்ற நபர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைக்கு பங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் டளஸ் அழகப்பெரும இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளார்.
அதேபோன்று எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா போட்டியிடுவது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்மையடைவதற்கே என்றும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் இந்த இரண்டு விடயங்களையும் நிராகரிப்பததுடன், இவற்றில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment