கணவன் வௌிநாட்டில்; குழந்தை பெற்ற மனைவி; பிரசவம் பார்த்த மாமியார்; குழந்தைக்கு தந்தை?
கோப்பு படம்
மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் குடும்ப பெண் ஒருவர்
திருட்டுத்தனமாக சிசு ஒன்றை வீட்டில் பிரசவித்து நிலத்தில் புதைக்கப்பட்ட
சம்பவம் நேற்று புதன்கிழழை (09) இம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பாக 3 பெண்கள்
கைது செய்யப்பட்டதுடன் சிசுவை பிரசவித்த தாயார் தலைமறைவு ஆகியுள்ளதாக
ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது,
ஏறாவூர்
பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சந்திவெளி பத்தினிஅம்மன் கோவில் வீதியைச்
சேர்ந்த 27 வயதுதுடைய ஒரு பெண் குழந்தைக்கு தாயான குடும்ப பெண்ணின்
கணவனார் கடந்த மூன்றரை வருடங்களாக வெளிநாட்டில் தொழில்புரிந்து வருகின்றார்.
இந்த
நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து
கடந்த 18 நாட்களுக்கு முன்னர் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய
நிலையில் குறித்த பெண்ணிற்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக
பெண்ணின் கணவரின் தாயார் மற்றும் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து
சம்பவதினமான நேற்று புதன்கிழமை (09) குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு
வெளியில் சென்றுள்ள நிலையில் மாலை குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி
ஏற்பட்டதையடுத்து வீட்டில் கணவனின் தாயாரான மாமரியார், பெண்ணின் தாயார் ,
சகோதரி ஆகிய மூவர் சேர்ந்து பிரசவத்தை பார்த்தனர்.
இதன்போது ஆண் சிசு ஒன்று
பிரசுவிக்கப்பட்டுள்ளது
பிரசவித்த சிசுவை துணி
ஒன்றினால் சுற்றிக் கொண்டு கோவிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில்
கிடங்கு வெட்டி புதைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில்
தெரியவந்துள்ளது .
பொலிசாருக்கு கிடைத்த
தகவலையடுத்து பொலிசார் இன்று வியாழக்கிழமை (10) குறித்த பெண்ணின் சகோதரி,
தாயார், மற்றும் கணவனின் தாயாரான ( மாமியர்) ஆகிய மூவரை கைது
செய்துள்ளதனர்.
குறித்த பெண் தப்பி ஓடி தலைமறை வாகியுள்ளதாகவும்.,புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின் நீதவானுடைய
அனுமதி கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்

Post a Comment