காலி மாத்தறையிலும் தேர்தல் பிரச்சாரம்; சிவாஜிலிங்கத்தின் அதிரடி நடவடிக்கை
26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை திறந்துவிடச் சொல்லும் தென்பு யாருக்காவது உள்ளதா என்று ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாடு பூராகவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளேன். ஆனால், பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளது. தெற்கில் காலி மாத்தறை பிரதேசங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படுமென நினைக்கின்றேன்.
பாதுகாப்பு வழங்கப்பட்டால், காலி, மாத்தறை மாவட்டங்களில் செய்யலாம்.
கொழும்பு, மலையகம், வடகிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமக்கு கிடைக்கப்பெறும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டு தான், பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் பிரதிநிதிகளை கைகோர்ப்பதற்கு, எனது நியமனம் வலுச்சேர்த்துள்ளது. எந்தக் கட்சிகளுடனும், சர்வதேச விசாரணை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்காக சமரசம் இல்லை.
அது யாராக இருந்தாலும், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்னெடுப்போம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு 10 லட்சம் கொடுக்கப்பட்டு செலவு செய்யப்பட்டதே இதைப் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
சுமிதி

Post a Comment