Header Ads

சுதந்திர கட்சியின் தலைவராக சந்திரிகா செயலாளராக வெல்கம - தயாசிறி நீக்கம்?




ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அந்தக் கட்சியின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிப்பதற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் நவம்பர் 16ம் திகதி நிறைவடைந்ததும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வௌியிட்டுள்ளது.
Powered by Blogger.