கோட்டா ஜனாதிபதியானால் பாதுகாப்பு செயலாளர் இவர்தான்?
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதும் ஓய்வு பெற்ற லெப்டினட் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன்னை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிப்பதாக கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக கமல் குணரத்ன தனக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரிடம் கூறியுள்ளதாக தெரிவித்து சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் தலா 40 பேர் என முன்னாள் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததால், அவரது வியத் மக அமைப்பின் பிரதான செயற்பாட்டாளரான கமல் குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய அண்மையில் வெளியிட்டிருந்த அரசியல் கட்டுரை ஒன்றில் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் அது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக யாரை நியமிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் செயலாளர்களை நியமிக்கும் முன்னர் முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Post a Comment