சஜித்தையும் ஆதரவாளர்களையும் பைத்தியம் பிடித்த நாய் என்ற மஹிந்த
ஜனநாயக ரீதியாக நாட்டை பாதுகாக்க அதிகாரம் கேட்கும் நபர்கள் பைத்தியம் பிடித்த நாய்கள் போல நடந்துகொள்வார்கள் எனின் அவர்களுக்கு அதிகாரம் வழங்கமுடியுமா என்பதில் பிரச்சினைகள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாய் போன்று நாட்டை பாதுகாக்கும் நபருக்கு
பைத்தியம் பிடித்தால் பைத்தியம் பிடித்த நாய்போல் நடந்துகொள்வார் எனவும்,
தற்போதே அவர்களது தொண்டர்கள் பைத்தியம் பிடித்த நாய்கள் போல
நடந்துகொள்வதாக கண்டி தலதாமாளிகைக்கு வருகைதந்த பின்னர் இன்று (24)
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ தலதா மாளிகையில் மரியாதை செலுத்திய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ
மால்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து தேரர்களை சந்தித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றி நிச்சயமானது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம்
சாட்டப்பட்டவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் விசாரணைகள்
பக்கச்சார்பானவை. ”
கோட்டாபய ராஜபக்ஷ பிரபலமடைந்து வெற்றியை
எட்டும்போது, எதிர்ப்பாளர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சட்ட
நடவடிக்கை மூலமாவது அவரது பயணத்தைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள்
ஆரம்பத்தில் இருந்தே அச்சுறுத்தலைக் கண்டார்கள். '
“மக்கள் தவறான பிரச்சாரத்திற்கு
ஆளாகக்கூடாது. காலப்போக்கில், மேலும் மேலும் தவறான பிரச்சாரம் பரவும்.
வேட்பாளர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் தாக்கப்பட்டதை நாங்கள்
ஊடகங்களில் பார்த்தோம். '
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
லோஹான் ரத்வத்த, கண்டி முன்னாள் ஆளுநர் டிகிரி கோபேகடுவ மற்றும் கண்டி
முன்னாள் மேயர் மகேந்திர ரத்வத்த ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Post a Comment