Header Ads

எதிர் காலத்தில் நடப்பதை முன் கூட்டியே அறிந்து வைத்துள்ள அதாவுல்லா





கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சந்தியில் செத்துக் கிடப்பார் என்றோம், அது நடந்திருக்கின்றது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடக்கையும், கிழக்கையும் பிரிக்க வேண்டும் என்றோம் பிரிந்தது. உலகமே நம்பாத மகிந்த, மைத்திரி இணைவைப் பற்றி பேசினோம். எங்களுக்கு தலை கழண்டுவிட்டது. பைத்தியம் பிடித்துவிட்டது. இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றார்கள்.

காலம் அவர்களுக்கு பதிலளித்துள்ளது போல எங்களுடைய இப்போதைய கோரிக்கைகளும் வெல்லும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது இலங்கையை பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இன்றைய சூழ்நிலையில் நாட்டின் இறைமைமை, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும்.

அந்த வகையில் 30 வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்ந ராஜபக்ச குடும்பத்தின் ஒருவரே நாட்டிற்கு ஏற்ற ஜனாதிபதியாவார். அந்த வகையில் தேசிய காங்கிரஸான எமது கட்சி கோத்தபாய ராஜபக்சவை ஆதரிக்கின்றது.

இன்று கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியானது சிங்கள மக்கள் மத்தியில் 72 தொடக்கம் 80 வீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவது உறுதியாக உள்ளது.

இந்த வெற்றியில் முஸ்லிம்களாகிய நாமும் பங்காளர்களாக வேண்டும். குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தவிர்ந்து ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியை தெரிவு செய்யும் விடயத்தில் நிதானமாக உள்ளனர்.

அவர்களது மனநிலைகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோ அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ மாற்ற முடியாது.
Powered by Blogger.