பாதுகாப்பு அமைச்சு கிடைத்த உடனேயே சரத் பொன்சேகா செய்ய போகும் முதல் விடயம்
தனக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கப்பட்ட பின்னர் முதலாவதாக, நாட்டினர் அனைவரும் சுதந்திரமாக வாழக் கூடிய நாட்டை உருவாக்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்கால சந்ததியினர் எந்த பயங்கரவாதத்திற்கும் அஞ்சாமல் வாழக் கூடிய நாட்டை உருவாக்குவோம்.
பிரதிபலன்களை பெற்றுக்கொள்ளக் கூடிய நாட்டுக்கு தேவையான பாதுகாப்பை தான் வழங்குவதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment