Header Ads

முஸ்லிம் தலைவர்கள் இனவாதத்தை விற்று அரசியல் விபச்சாரம் செய்கிறார்களாம்



தேர்தலில் இனவாதத்தை விற்க முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா? என்று  மேல் மாகாண ஆளுநர் முஸம்மில் கேள்வியெழுப்பினார்

பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை பிராந்திய முக்கியஸ்தர் அஹமட் புர்கான் தலைமையில் மக்கள் சந்திப்பொன்றும்  வியாழக்கிழமை(24)  மதியம்  கல்முனை கிரீன் பீல்ட் தொடர்மாடி குடியிருப்பில் இடம் பெற்றது.

இதில் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ,

எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஜனாதிபதி தேர்தலொன்று இடம்பெறவுள்ளது. இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் விசேடமாக முஸ்லிம் மக்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த தேர்தலாகவே நான் கருதுகிறேன்.

பிரதானமாக கோட்டாபய ராஜபக்ச மற்றும் சஜித் பிரமதாச ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த இரண்டு பேரில் யார் இந்த நாட்டை சரியாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை  நாம் உணர்ந்து தெரிவு செய்ய வேண்டும் .

இந்த ஆட்சியில் முஸ்லிம் மக்கள் மீது இனவாத கருத்துக்களும் பல்வேறு  தாக்குதல்களும் திட்டமிடப்பட்டு நடந்தேரியது. இவ்வகையான தாக்குதல்களை கண்டித்து முஸ்லிம் மக்களுக்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயோ அல்லது பாராளுமன்றத்திற்கு வெளியே என்றாலும் ஒரு வார்த்தை கூட பேசாதவர் தான் இன்றைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச .

நான் கொழும்பு மேயராக இருந்த கால கட்டத்தில் கொழும்பு நகரை ஓர் முதல்தர நகராக மாற்ற கோத்தபாய ராஜபக்ஸ எனக்கு உதவினார். மேலும் அக்காலத்தில் ஜாதி, இனம் பாராமல் எல்லா மக்களையும் கொழும்பில் வாழ எல்லோருக்கும் சமமான நிலையை ஏற்படுத்தினார்.


இந்த தேர்தலில் இனவாதத்தை விற்க இன்று முஸ்லிம் தலைவர்கள் சிலர் முயற்சிக்கின்றனர். எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் எம்மை சரியான அரசியல் பாதையில் அழைத்து சென்றனரா?

இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்கிறார்களா? அல்லது அரசியல் வியாபாரம் செய்கிறார்களா? என்று கேள்வியெழுப்பினார்.

பாறுக் ஷிஹான்
Powered by Blogger.