Header Ads

உயர் தரம் சித்தியடையும் அனைவருக்கும் பல்கலைக்கழகம்; கோட்டாவின் மற்றொரு வாக்கு



உயர்தர பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர சந்தர்பம் வழங்கப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பா கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அதேபோல் புத்தி சாதுரியமிக்க இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்புகளை பெற்றுக்கொடுப்பதும் தமது எதிர்பார்ப்பு என வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற மக்கள் கூட்டம் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

அங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, சரிவடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப கூடிய சந்தர்பம் இதுவாகும் என கூறினார்.

அங்கு உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் விவசாயத் துறையை மறந்து செயற்படுவதாக தெரிவித்தார்.

Powered by Blogger.