Header Ads

கோட்டாவின் அரசாங்கத்தில் ரணிலின் ஆட்களே இருப்பர்

எதிர்வரும் தனது ஆட்சியில் குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தேசிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் சத்யவாதி மைதானத்தில் நேற்று (10) மாலை இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சியை மாற்றி புதிய அரசாங்கத்தை அமைப்பதாக கூறி அதிகாரத்தை கேட்டனர். ஆனால்
வாக்களித்த பின்னர் பழைய அரசாங்கமே அமைந்தது.

இப்போது ரணிலை தோற்கடித்து கோட்டாவிற்கு வாக்களிக்க முயற்சிக்கின்றீர்கள். உண்மையாகவே கோட்டாவின் அரசாங்கத்தில் ரணிலின் ஆட்களே இருப்பர்.

தற்போதைய அரசாங்கம் விவசாய துறையை முற்றாக அழித்துள்ளதாக மஹிந்த அநுராதபுரத்தில் வைத்து கூறினார். அப்போது அரசாங்கத்தில் இருந்த விவசாயத்துறை மஹிந்தவின் பேச்சை கேட்டு கைத் தட்டி ஆர்ப்பரிக்கின்றார்.

அடுத்தாக மஹிந்த தற்போதைய போக்குவரத்துதுறையை அரசாங்கம் சீரழித்தாக கூறினார். அப்போது அங்கிருந்த போக்குவரத்து அமைச்சர் கைகொட்டி மகிழ்கின்றார்.

அடுத்தாக மஹிந்த சட்டத்தை மதிக்கும் ஒரு அரசாங்கத்தை அமைக்கவுள்ளதாக கூறும் போது அதற்கு வழக்கை எதிர்கொண்டுள்ள அனைவரும் கைத் தட்டுகின்றனர்.

சட்டத்தை மதிக்கும் அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் முதலில்
அநுராதபுர கூட்டத்தின் போது மேடையில் இருந்தவர்கள் அனைவரும் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட வேண்டும்.


No comments

Powered by Blogger.