Header Ads

காணாமல் போனவர்களை புதிதாக உருவாக்க முடியாது; மரண சான்றிதழ் வழங்கலாம்




காணாமல் போயிருப்பவர்கள், காணாமல் போயிருக்கின்றார்கள். காணாமல் போனவர்கள் இறந்திருக்கலாம். அவர்களை எங்கு சென்று அழைத்து வருவது.

அவர்களை புதிதாக உருவாக்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எம்மால் செய்ய முடியுமான சில விடயங்கள் உள்ளன. ஒன்று மரண சான்றிதழை வழங்க முடியும். அடுத்ததாக பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு நிவாரணம் வழங்க முடியும்.

இதனை மனிதாபிமான ரீதியில் நாங்கள் செய்யலாம். இதனை விட நாம் என்ன செய்ய முடியும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 200 பேர் விடயத்தில் பாரிய குற்றமிழைக்காதோருக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்த முடியும்.

சிறையில் இருப்பவர்களை தமிழ் அரசியல் கைதிகள் என்று கூற முடியாது. சிறைக் கைதிகளே உள்ளனர். இன்னும் 200 பேர் அளவிலேயே இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

நான் அது தொடர்பில் திட்ட முறைமையை தயார்படுத்தியிருந்தேன். நாங்கள் ஆயிரக் கணக்கான உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தினோம்.

இந்த 200 பேர் விடயத்திலும் அந்த முடிவுக்கு செல்ல முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.