சஜித்தின் ஆட்சியில் பிரமதராக உள்ள இளைஞன்
சஜித் பிரேமதாச ஜனாதிபதியான பின்பு அவரின்
பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பாக அவருக்கு முழு
சுதந்திரம் உள்ளது என அமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சஜித் பிரேமதாச, ஊழல்
குற்றச்சாட்டுகள் இல்லாமல், திறமையான, தொழில்முறை மற்றும் வேலை
செய்யக்கூடிய ஒரு இளைஞரை புதிய பிரதமராக நியமிக்க நடவடிக்கை எடுப்பார் என
அவர் குறிப்பிட்டுள்ளார்.
"சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக்க மிகவும் போராடியவர்களில் மிக முக்கியமான நபர்களில் நானும் ஒருவன்.
நான் நேரடியாக கூறுகிறேன். பிரதமரைத்
தேர்ந்தெடுப்பதற்கான முழு சுதந்திரமும் சஜித் பிரேமதாசவுக்கு உண்டு.
அந்த பிரதமரை அவர் தேர்ந்தேடுப்பது நான் முன்பு கூறியது போல்,
அவர் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத திறமையான, தொழில்முறை மற்றும் திறமையான
இளைஞன் என்று நான் இந்த சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.
எனவே, அவர் அந்த
முடிவை நேரடியாக எடுப்பார், ”என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடையில் நடைபெற்ற
கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்
போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Post a Comment