மைத்திரி ஆதரவு வழங்கப் போகும் வேட்பாளர் யார்?
ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை
நடுநிலையாக செயல்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன இரு முக்கிய வேட்பாளர்களில் ஒருவருக்கு அடுத்த வாரத்திற்குள்
தீர்க்கமாக செயல்பட முடிவு செய்துள்தாக ஜனாதிபதிக்கு நெருங்கிய வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இதற்கமைய தற்போது ஜப்பானில்
சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு
திரும்பியதும் ஒரு வேட்பாளருக்கு தமது ஆதரவை வழங்குவதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களில் ஜனாதிபதித் தேர்தல்
குறித்து ஜனாதிபதிக்கு பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி
அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி குறித்த அறிக்கையை கவனத்தில்
கொண்டு தனது ஆதரவை ஜனாதிபதி வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர் யார் என்பது குறித்து அல்லது
பிரச்சார களத்தில் இறங்குவாரா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை
என்றாலும் மைத்ரிபால சிறிசேன தேர்தல் களத்தில் இறங்கும் போது அரசியல்
அரங்கம் நிச்சயமாக சூடுபிடிக்கும் என்று துப்பு கிடைத்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ஷ மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்று கோட்டாபய ராஜபக்ஷ மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment