Header Ads

ரணிலையும் மஹிந்தவையும் தனித் தனியாக சந்தித்த முன்னாள் போராளிகள்



பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடனும் தமது கட்சி அண்மையில் கலந்துரையாடியதாக முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களை உள்ளடக்கிய ஜனநாயக போராளிகள் கட்சியின்
செய்தித் தொடர்பாளர் கே.சந்திரலிங்கம் எனப்படும் துளசி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புகளில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.

இதன் போது தமது கட்சி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தாகவும் அந்தவகையில் தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்பவரையே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் கொள்கை பிரகடனத்தை எதிர்வரும் கிழமை வவுனியாவில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து அறிவிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறினார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை முழுமையாக விடுவித்தல், 12,000 க்கும் மேற்பட்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தமது கொள்கை பிரகடனத்தில் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகளவில் வசிப்பதாகவும் அவர்களுக்கான பல கோரிக்கைகள் இருப்பதால் அவை தொடர்பில் கவனம் செலுத்துவோருக்கே தமது கட்சி ஆதரவளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
Powered by Blogger.