Header Ads

வைத்தியசாலைக்குள் புகுந்த கத்தியால் குத்த முயற்சித்த பொதுஜன பெரமுன உறுப்பினர்







Image result for hospital inside of srilanka



சிலாபத்தில் வைத்தியசாலைக்குள் நுழைந்து தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ற முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உறுப்பினரின் மனைவி சிலாபம் மாவட்ட வைத்தியசாலை ஊழியராக செயற்பட்டு வருகின்றார்.

நீண்ட காலமாக கணவன் மனைவிக்கு இடையில் முரண்பாடு காணப்பட்டது. இந்த நிலையில் கணவனால் தனக்கு ஆபத்து என கூறி உறுப்பினரின் மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் மனைவி பணி செய்யும் வைத்தியசாலைக்கு சென்ற பிரதேச சபை அவரை கத்தியால் குத்த முயற்சித்துள்ளார்.

இதன் போது வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி கத்தியை பறித்து சம்பவத்தை தடுத்துள்ளார்.

இதன் போது கத்தியை பறிக்க உறுப்பினர் மல்லுக்கட்டியமையினால் பாதுகாப்பு அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சிலாம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.